துவரம் பருப்பு – 50 கிராம்
ஆவாரம் பூ – 20 கிராம்
இஞ்சி – 5 கிராம்
பூண்டு – 5 கிராம்
சிறிய வெங்காயம் – 100 கிராம்
புளிக் கரைசல் – 3 மேசைக்கரண்டி
பெருங்காயத் தூள் – சிறிது
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத் தூள் – 1 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப
கறிவேப்பிலை – சிறிது
கொத்துமல்லி – சிறிது
தக்காளி – 2
நல்லெண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2.
செய்முறை:
துவரம் பருப்புடன் ஆவாரம் பூ, நசுக்கிய இஞ்சி, பூண்டு, 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி குழைய வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் இட்டு தாளித்து அத்துடன் சின்ன வெங்காயம், நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த பருப்பு, புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு, பெருங்காயத்தூள் மல்லித்தழை சேர்த்து இறக்கவும்.