சென்னை: ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு முதல்வர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் பணியாளர்களுக்கு 2022-2023ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 சதவிகிதம் மற்றும் கருணைத் தொகை 11.67 சதவிகிதம் ஆக மொத்தம் 20 சதவிகிதம் வழங்க ஆணையிட்டுள்ளார். அதன்படி சி மற்றும் டி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியளார்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் 4070 பணியாளர்களுக்கு இவ்வாண்டு தீபாவளி மிகை ஊதியம் மற்றும் கருணை தொகையை ரூ.5.96 கோடி வழங்க முடிவு செய்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நந்தனம் ஆவின் இல்லம் வளாகத்தில் பணியாளர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையை பால்வளத்துறை அமைச்சர் நேரடியாக வழங்கினார். இதற்கான மொத்த செலவீனம் ரூ.5.96 கோடியினை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியளார்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் சொந்த நிதியிலிருந்து செலவிடப்படுகிறது. இந்நிகழ்வில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத், பண்டி கங்காதர் முதன்மை விழுப்புக்குழு அலுவலர், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.