கோவை: அத்திக்கடவு-அவினாசி திட்டதை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைளையும் திமுக அரசு மேற்கொண்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அத்திக்கடவு – அவினாசி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொண்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அத்திக்கடவு – அவினாசி
திட்டம் தாமதம் ஆவதற்கு நிலம் கையகப்படுத்தாததுதான் காரணம் என அமைச்சர் முத்துசாமி விளக்கமளித்தார்.