திருவள்ளூர்: திருவள்ளூர் ஆவின் தொழிற்சாலையில் இயந்திரத்தில் முடி சிக்கியதால் தலை துண்டாகி உமா மகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். உமா மகேஸ்வரியின் முடி இயந்திரம் அருகில் இருந்த மோட்டாரின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கியது. மோட்டாரில் முடி சிக்கிக் கொண்டதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உமா மகேஸ்வரி உயிரிழந்தார். பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து காக்களூர் ஆவின் பால் பண்ணையில் பால் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுத்து.
இயந்திரத்தில் முடி சிக்கி தலை துண்டாகி பெண் பலி
previous post