0
நீலகிரி: நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் கடந்த 24 மணி நேரத்தில் 25 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. எமரால்டு 13 செ.மீ., மேல் பவானி 12 செ.மீ., சேரங்கோடு 10 செ.மீ. மழை பதிவானது. அவலாஞ்சியில் தொடர்ந்து 2வது நாளாக 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்துள்ளது.