Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த ரூ.10,000 கோடி நிதி - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: விமான எரிபொருள் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், இந்த தகவலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாக்கர்களிடம் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், மேற்கு ஆசியப் போர் நெருக்கடியால் உயர்ந்து வரும் விமான எரிபொருள் (ATF) விலையிலிருந்து இந்திய விமான நிறுவனங்களைப் பாதுகாக்க ரூ.10,000 கோடி விலை நிலைப்படுத்தல் நிதிக்கு (Price Stabilisation Fund) மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த முடிவின் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு (OMCs), அரசு ரூ.10,000 கோடி வரை வட்டியில்லா முன்பணம் வழங்கும். உலகளாவிய இறக்குமதி விலை, அரசு நிர்ணயித்த விலையை விட அதிகரிக்கும் போது எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை இந்த நிதி ஈடுசெய்யும். ர்வதேச சந்தையில் விலை குறையும் போது, எண்ணெய் நிறுவனங்கள் கூடுதல் தொகையை இந்திய ஒருங்கிணைந்த நிதியத்திற்கு (Consolidated Fund of India) திருப்பிச் செலுத்தும் என கூறப்படுகிறது. இதன் மூலம் எரிபொருள் விலை கட்டுப்படுத்தப்படும். இதன் காரணமாக விமான நிறுவனங்கள் கூடுதல் கட்டணத்தை பயணிகள் மீது சுமத்தாது. இதனால் பயண கட்டணம் உயராமல் தடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.