மதுரை: ஆவணி மாத தொடக்கம் மற்றும் விஷேச நாட்களை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகை உள்ளிட்ட பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.300க்கு விற்பனையான மல்லிகை ஒரு கிலோ தற்போது ரூ.1,500க்கு முல்லை, பிச்சி ஒரு கிலோ தலா ரூ.800க்கும், கனகாம்பரம் ரூ.1,000க்கும் விற்பனை ஆகிறது.