தேவையான பொருட்கள்
அவல் – 1/4 கிலோ
பனீர் – 100 கிராம்
தேங்காய்த்துருவல் – 1 கப்
பச்சை மிளகாய் – 5
இட்லி மிளகாய்ப்பொடி – 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தாளிக்க
கடுகு – 1/2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – ஒரு கைப்பிடி
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன் (கொர கொரவென்று அரைத்தது)
சீரகம் – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி – ஒரு பிடி.
செய்முறை
சுடுநீரில் அவலை அரை மணி நேரம் ஊற வைக்கவும். பனீரை துருவி வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கடலைப் பருப்பு, வேர்க்கடலை தாளித்து ஊற வைத்த அவல், துருவிய தேங்காய், துருவிய பனீர், உப்பு சேர்த்து நன்கு கிளறவும். பிறகு, உருண்டை பிடித்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். பின்பு மீண்டும் வாணலியில் எண்ணெய் ஊற்றி வேகவைத்த உருண்டைகளை போட்டு அதன் மீது இட்லிப்பொடி தூவி நன்றாக பிரட்டி எடுக்கவும். சுவையான அவல் பனீர் பொடி உருண்டை தயார்.