சென்னை: ஆவடி இரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னைக்கு செல்லும் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அண்ணனூர் பணிமனையில் இருந்து ஆவடி ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய ரயில், சிக்னலை கடந்து சென்றது. ரயில் ஓட்டுநர் தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.