1. Graduate Apprentice (Engineering): 110 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Non- Engineering Graduate Apprentice: 100 இடங்கள். தகுதி: கலை/அறிவியல் பிரிவைச் சேர்ந்த ஏதாவதொரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
3. Technician Apprentice: 110 இடங்கள். தகுதி: பயிற்சி வழங்கப்படும் பொறியியல் பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பி.இ.,/பி.டெக்.,/பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பயிற்சியளிக்கப்படு்ம் பாடப்பிரிவுகள், பாடவாரியாக காலியிடப் பகிர்வு விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ9 ஆயிரமும், டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹8 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும். 2020, 2021, 2022, 2023ம் ஆண்டுகளில் படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
www.nats.education.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் தங்களின் கல்வித்தகுதி பற்றி விவரங்களை வருகிற 19ம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் Establishment Name List ல் கிளிக் செய்து அதிலிருந்து Heavy Vehicle Factory, Avadi ஐ தேர்வு செய்து, அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.டிகிரி, டிப்ளமோ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் விவரம் www.boatsrp.com என்ற இணையதளத்தில் ஆக.26ம் தேதி வெளியிடப்படும். செப். 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.08.2024.