திருவள்ளூர்: ஆவடி மாநகர காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக பூவை பீ.ஜேம்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ, வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தீவிரமாக தேர்தல் பணியை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் பொறுப்பாளர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, ஆவடி மாநகராட்சி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவரும் எம்எல்ஏவுமான கு.செல்வப் பெருந்தகை உத்தரவின்பேரில், ஆவடி மாநகராட்சி காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளராக திருவள்ளூர் தெற்கு முன்னாள் மாவட்ட தலைவர் பூவை பீ.ஜேம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.