சென்னை: எதிலும் வல்லவர் வேலு, இன்றைக்கு எழுத்திலும் வல்லவர் என்று சொல்கிற அளவுக்கு புத்தகத்தை மிகச் சிறப்பாக ெகாண்டு வந்துள்ளார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் புத்தகம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: கலைஞருடன் நெருங்கிப் பழகியவர்கள் ஏராளம். அவர்களில், கலைஞரின் அன்பிற்குரிய தம்பியாக திகழ்ந்தவர் எ.வ.வேலு. எ.வ.வேலு என்றால் எதிலும் வல்லவர் வேலு என்று கலைஞரும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் ெசால்வார்கள்.
எதிலும் வல்லவர் வேலு, இன்றைக்கு எழுத்திலும் வல்லவர் என்று சொல்கிற அளவுக்கு இந்த புத்தகம் மிகச் சிறப்பாக கொண்டு வந்துள்ளார். திருவண்ணாமலையின் அடையாளம் கார்த்திகை தீபம் மட்டுமல்ல, திமுகவின் வேலுவும் என்கிற வகையில் திமுகவின் கோட்டையாக திருவண்ணாமலையை எ.வ.வேலு மாற்றியிருக்கிறார். எந்த காரியத்தை எடுத்தாலும், அதை வெற்றியுடன் முடிக்கும் ஆற்றல் பெற்றவர்தான் வேலு. 1967ல் கலைஞர், அண்ணாவின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.
அப்போது, நிருபர்களிடம் பேசும்போது, “ பொதுப்பணி என்பது புதிதல்ல. அது பழைய பணிதான். பட்டுக்கோட்டை அழகிரிசாமியை – பெரியார்- அண்ணாவை கண்ட நாள் முதல் நான் பொதுப்பணியில் இருந்து வருகிறேன். அதனால் தான், அண்ணா இன்றைக்கு பொதுப்பணி துறையையும் எனக்கு வழங்கி இருக்கிறார்’’ என்று கலைஞர் கூறினார். அதைபோலவே பொதுப்பணிகளில் சிறந்து விளங்கி வரும் வேலு, இன்றைக்கு பொதுப்பணித்துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.
கடந்த மூன்றாண்டுகளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பல்வேறு சாதனைக்குரிய கட்டமைப்புகளை கட்டி எழுப்பிய பெருமை அண்ணனுக்கு உண்டு. குறிப்பாக கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு, கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானம், கலைஞரின் நினைவிடம் என்று தலைவரின் வழிகாட்டுதலின்படி எ.வ.வேலு கட்டி எழுப்பியவை ஏராளம். இன்றைக்கு சொற்களாலும் கலைஞருக்காக ஒரு கோட்ைடயை கட்டி எழுப்பியிருக்கிறார். அது தான் இந்த ‘கலைஞர் எனும் தாய்’ புத்தகம். இவ்வாறு அவர் கூறினார்.