சென்னை: ஏவி மெய்யப்பனின் மாப்பிள்ளையான அருண் வீரப்பன் (90) வயது மூப்பின் காரணமாக காலமானார். ஏவிஎம் தயாரிப்பில் கமல்ஹாசன் அறிமுகமான ‘களத்தூர் கண்ணம்மா’ உட்பட பல திரைப்படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியுள்ளார்.
40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்பட தயாரிப்பில் அனுபவம் கொண்டவர் அருண் வீரப்பன். மேலும் இவர் கியூப் சினிமா நிறுவனத்தின் தலைவராக இருந்தவராவார். அருண் வீரப்பன் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தபோது “களத்தூர் கண்ணம்மா” திரைப்படத்தின்மூலம், கமல்ஹாசனை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த அருண் வீரப்பன், 10 நாட்களுக்கு முன்பு தவறிவிழுந்து காயமடைந்தார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில், இன்று மாலை 5 மணிக்கு காலமானார். இவரின் இழப்பு பல்வேறு தரப்பினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.