திருத்தணி : திருத்தணி முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா நடைபெற்று வருகின்றது. 28ம் தேதி முதல் முருகன் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட வாகன நுழைவுச்சீட்டு பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இதில் பக்தர்களை மலைக் கோயிலுக்கு ஏற்றிச் சென்று வர ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர்கள் போலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர். இருப்பினும், அட்டோக்களுக்கு அனுமதி வழங்காததால் போலீசார் மற்றும் ஆட்டோ தொழிலாளரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள் 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கமலா திரையரங்கம் அருகில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து திருத்தணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மதியரசன் விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மலைக்கோயிலுக்கு பயணிகளை ஏற்றிச் செல்ல் ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று கூறியதையதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.