சென்னை: தமிழ்நாட்டில் ரூ.500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுப்படுத்த ஒப்பந்தமாகியுள்ளது. கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள் உற்பத்தியில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது.
Suresh
மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாகி கைது
மதுரை: மதுரை விசாகா பெண்கள் விடுதியில் தீவிபத்து ஏற்பட்டு 2 பெண்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதியை நடத்தி வந்த இன்பா என்ற பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஃபிரிட்ஜ் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர்.
தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை: தொடர் விடுமுறை, மிலாது நபி என 4 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை மற்றும் செப். 14 ஆகிய நாட்களில் 955 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. கும்பகோணம், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 540 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்கம் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 190 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
சிதம்பரம் அருகே காரும், லாரியும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் கார் லாரி நேருக்கு நேர் மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 5 பேர் உடல்களையும் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.
சிதம்பரம் அருகே பு. முட்லூர் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை நெடுஞ்சாலையில் கார் – லாரி நேருக்கு மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த யாசர் அராபத் (40), முகமது அனவர் (56), ஹாஜிதா பேகம் (62), சாராபாத் நிஷா (30) மற்றும் அப்னான் (2) ஆகிய 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை சந்தித்துவிட்டு, வீடு திரும்பும்போது ஏற்பட்ட லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில் காரின் முன்பகுதி முழுவதும் நொறுங்கியது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேதச பரிசோதனைக்காக சிதம்பரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஜன.10ஆம் தேதி பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில் விற்றுத்தீர்ந்தது. தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்கான அனைத்து ரயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்தது. வரும் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி
ஹங்கேரி: புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆடவர் பிரிவில் மெராகோவை எதிர்கொண்ட இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரக்ஞானந்தா, ஹரிகிருஷ்ணா, அர்ஜுன் எரிகேசி, விதித் குஜராத்தி தலா 1 புள்ளி பெற்று மொராகோவை ஒயிட் வாஷ் செய்தனர். மகளிர் பிரிவில் ஜமைக்காவை எதிர்கொண்ட இந்திய அணி 3.5 – 0.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் தலா ஒரு புள்ளி, வந்திகா அகர்வால் டிரா செய்து 0.5 புள்ளி பெற்று வெற்றி பெற்றனர். முதல் சுற்றில் இந்திய ஆடவர் அணி மொராக்கோவையும், மகளிர் அணி ஜமைக்காவையும் வீழ்த்தியது. 11 சுற்றுகள் முடிவில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்லும்.
மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து: 2 பெண்கள் உயிரிழப்பு
மதுரை: மதுரை கட்ராபாளையத்தில் உள்ள விசாகா பெண்கள் விடுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர். விடுதியில் தங்கியிருந்த பரிமளா, சரண்யா ஆகியோர் உயிரிழந்தனர். அதிகாலையில் ஃப்ரிட்ஜ் வெடித்ததில் விடுதி முழுவதும் தீ பரவியதில் இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடக்கம்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 16ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 10ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வோர் இன்று டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜன.11இல் பயணிப்போர் 13ஆம் தேதியும். ஜன. 12இல் பயணிப்போர் 14ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம். ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையன்று பயணம் மேற்கொள்வோர் செப். 15இல் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.