கீழடி அகழாய்வில் குறிப்பிடத்தக்க எதுவும் கிடைக்கவில்லை எனக்கூறி கண்டனத்திற்கு உள்ளான கண்காணிப்பாளர் பி.எஸ்.ஸ்ரீராமனிடம் 3ம் கட்ட அகழாய்வு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. 2019ல் ஓய்வு பெற்ற அவரிடம் ஒன்றிய அரசு தற்போது அறிக்கை கேட்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
MuthuKumar
ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 5 பேர் கைது
ஐதராபாத்: ஐபிஎல் டிக்கெட் மோசடி தொடர்பாக ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் உள்பட நிர்வாகிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐபிஎல் தொடரில் டிக்கெட் விற்பனையில் முறைகேடு என்ற குற்றச்சாட்டில் தெலங்கானா சிஐடி காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். கூடுதல் இலவச டிக்கெட்டுகள் கேட்டு ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மிரட்டல் விடுப்பதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி குற்றம்சாட்டியிருந்தது. ரூ.2.3 கோடி மோசடி செய்த புகாரிலும் ஐதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளை கைது செய்தனர்.
தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு
சென்னை: சென்னை: தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகள் செல்ல ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் தடை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை அடித்து ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதால் மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர்: அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் தொடங்க எதிர்ப்பு தெரிவிக்கும் எடப்பாடிக்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பழனியில் அறநிலையத்துறை சார்பில் செயல்படும் கல்லூரிக்கு கூடுதல் கட்டடங்களை மயக்கத்தில் சென்று திறந்து வைத்தாரா எடப்பாடி பழனிசாமி..? படிப்பு என்றால் எடப்பாடிக்கு ஏன் இவ்வளவு கசக்கிறது..? பாஜகவின் உண்மையான குரலாகவே எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கியுள்ளார் என முதல்வர் கூறினார்.
அரசு நலத்திட்ட உதவிகள் விழாவில் திருவாரூர் மாவட்டத்திற்கு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர்: ஜூப்ளி மார்கெட் பகுதியில் ரூ.11 கோடியில் புதிய வணிக வளாகம் அமைக்கப்படும். திருவாரூர் மாவட்ட மாணவர்க்ள் பயன்பெற நன்னிலம் வட்டத்தில் ரூ.56 கோடி செலவில் மாதிரி பள்ளி அமைக்கப்படும். மன்னார்குடி நகராட்சியில் ரூ.18 கோடியில் அரசு மகளிர் கலைக் கல்லூரி அமைக்கப்படும். ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் மதகுகள் ரூ.43 கோடி செலவில் புனரமைக்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர்: திமுக ஆட்சிக்கு வந்தால் திருவாரூர் ஆடிப்பெருக்கு போல வளர்ச்சி காணும். திருவாரூர்ல் 4 ஆண்டுகளில் 241 கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 58,000 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2976 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என திருவாரூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக் கல்லூரியில் மாணவர் விடுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என பெயர் மாற்றப்பட்டுள்ள நிலையில் விடுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: 50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, ஓரணியில் தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.