குமரி: ஈரான், இஸ்ரேலில் கன்னியாகுமரியைச் சேர்ந்த சுமார் 1,000 மீனவர்கள் சிக்கியுள்ளனர். போர் காரணமாக ஈரான், இஸ்ரேலில் சிக்கியுள்ள தமிழ்நாடு மீனவர்கள் 1000 பேரை மீட்க குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் உள்ளிட்டோரை ஒன்றிய அரசு மீட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்து மூலம் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களை பத்திரமாக தாயகம் அழைத்து வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
Karthik Yash
ஓசூர் தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் மீது 3வது நாளாக போக்குவரத்து தடை
ஓசூர்: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இடைவெளி ஏற்பட்ட பாலத்தின் மீது 3வது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மேம்பாலத்தின் இணைப்பு விலகியதை அடுத்து போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒசூர் பேருந்து நிலையம் முன் இரு பாலங்கள் இடையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு செல்லும் பாலம் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகளுக்கு மாற்று பாதை ஏற்பாடு செய்யபட்டுள்ளது. பெங்களூர்-கிருஷ்ணகிரி செல்லும் 3 வழிப்பாதையில், பெங்களூரு நோக்கி வாகனங்கள் செல்ல ஏற்பாடு.
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏன் நடக்கக் கூடாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி
வாஷிங்டன்: தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், அங்கு ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது? என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. அந்த நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதை தடுப்பதே நமது தாக்குதலின் முக்கிய நோக்கம் எனவும் கூறினார்.
இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிப்பு
டெல்லி: இந்திய கடற்படையின் புதிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து ஜூலை 1ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. 125 மீட்டர் நீளம், 3900 டன் எடை கொண்ட போர்க்கப்பல் இந்திய, ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இந்திய கடற்படையில் மேற்கு பிரிவில் தமால் போர்க்கப்பல் இணைக்கப்பட உள்ளது.
டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது கனடா அணி
கனடா: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்க கனடா அணி தகுதி பெற்றுள்ளது. இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை போட்டியில் 20 அணிகள் பங்கேற்கின்றன. 12 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்ற நிலையில் 8 அணிகளை தேர்வு செய்ய தகுதிச்சுற்று போட்டி நடக்கிறது.
கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழப்பு: ஜெகன் மோகன் ரெட்டிமீது வழக்கு பதிவு
ஆந்திரா: ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கார் டயரில் சிக்கி தொண்டர் உயிரிழந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்ட்டுள்ளது. கார் ஓட்டுநர் ரமண ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். ஜெகன் மோகன் உதவியாளர் நாகேஸ்வர் ரெட்டி, முன்னாள் எம்.பி சுப்பா ரெட்டி, முன்னாள் அமைச்சர் விடதலா ரஜினி, முன்னாள் எம்.எல்.ஏ பேர்னி நானி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.