கேன்பரா: ஆஸ்திரேலியாவில் மொத்தம் 150 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் 76 தொகுதிகளை கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும். அதற்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சி பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தலைமையிலும், கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்க்கட்சி தலைவர் பீட்டர் டட்டன் தலைமையிலும் போட்டியிட்டன.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் ஆளும் தொழிலாளர் கட்சி 78 தொகுதிகளுக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து அந்தோனி அல்பானிஸ் மீண்டும் பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். தொடர்ந்து அவர் 2வது முறையாக பிரதமர் பதவியை ஏற்கிறார். 21 ஆண்டுகளில் இல்லாத சாதனை ஆகும்.