Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து வெற்றி

பாஸ்டன்: பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் வெற்றி பெற்றன. பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ‘சி’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஹைட்டி அணியும், ஸ்காட்லாந்து அணியும் மோதின. இந்த போட்டி அமெரிக்காவின் பாக்ஸ்பரோ மைதானத்தில் நேற்று மாலை நடந்தது. ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் ஸ்காட்லாந்தின் நட்சத்திர வீரர் ஜான் மெக்கின் அபாரமான கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெற செய்தார். 20 வயது இளம் வீரர் பென் கானன்-டோக் கொடுத்த அருமையான கிராஸைப் பயன்படுத்தி மெக்கின் இந்த கோலை அடித்தார்.

உலகத் தரவரிசையில் 83வது இடத்தில் உள்ள ஹைட்டி அணி 2வது பாதியில் ஸ்காட்லாந்துக்கு கடும் சவாலளித்தது. ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் ஹைட்டியின் பிரான்ட்ஸ் டி பியரோட் தலையால் முட்டிய பந்து, ஸ்காட்லாந்து கோல்கீப்பர் அங்குஸ் கன்னையும் தாண்டி நூலிழையில் வெளியேறியது. இதனால், ஸ்காட்லாந்து அணி தப்பியது. இறுதியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்து வெற்றி பெற்றது. இதனால் குரூப் ‘சி’ பிரிவில் 3 புள்ளிகளுடன் ஸ்காட்லாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கனடாவின் வான்கூவர் மைதானத்தில் நேற்று மாலை குரூப் ‘டி’ பிரிவில் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் துருக்கி அணிகள் மோதின. கடந்த 2002 உலகக் கோப்பையில் 3வது இடம் பிடித்ததற்குப் பிறகு முதன்முறையாக உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெற்றுள்ள துருக்கி அணிக்கு 21 வயதான நட்சத்திர வீரர் அர்டா குலர் பெரும் நம்பிக்கையாக இருந்தார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் துருக்கி ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பிலேயே நெஸ்டோரி இரான்குண்டா கோல் அடித்து அணியை 1-0 என முன்னிலை பெறச் செய்தார். பால் ஒகான்-எங்ஸ்ட்லர் கொடுத்த பாஸை அவர் கோலாக மாற்றினார். துருக்கி அணி கோல் அடிக்கப் போராடியபோதிலும், ஆஸ்திரேலிய கோல்கீப்பர் பேட்ரிக் பீச் மற்றும் பலமான தடுப்பாட்டம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. அப்துல்கெரிம் பர்டாக்கி அடித்த பந்தை பீச் தடுத்து கம்பத்தில் படச் செய்து அற்புதமாகக் காப்பாற்றினார்.

இரண்டாவது பாதியில் துருக்கி அணி பந்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தபோதும், கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் 75வது நிமிடத்தில் ஆஸ்திரேலியாவின் கானர் மெட்காப் லாங் ரேஞ்ச் ஷாட் மூலம் 2வது கோலை அடித்து துருக்கிக்கு அதிர்ச்சியளித்தார். ஆட்டத்தின் முடிவில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து குரூப் டி பிரிவில் ஆஸ்திரேலியா 3 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பராகுவேயை 4-1 என வீழ்த்திய அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

முதல் புள்ளியை பதிவு செய்த கத்தார்

கடந்த 2022ம் ஆண்டு தனது சொந்த நாட்டில் நடந்த உலகக் கோப்பையில் விளையாடிய கத்தார் அணி, லீக் சுற்றின் அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தது. ஆனால், இந்த முறை பலம் வாய்ந்த சுவிட்சர்லாந்து அணியை ‘டிரா’ செய்து, உலகக் கோப்பை வரலாற்றில் தனது முதல் புள்ளியைப் பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. அதேபோல, சுவிட்சர்லாந்து அணி 1966ம் ஆண்டுக்கு பிறகு தனது உலகக் கோப்பை வரலாற்றிலேயே மிக அதிகமாக 26 முறை கோல் அடித்த சாதனையை தொட முயற்சித்தது. ஆனால், கத்தார் கோல்கீப்பரின் சிறப்பான தடுப்பாட்டத்தாலும், சுவிட்சர்லாந்து வீரர்களின் பினிஷிங் சொதப்பலாலும் அவர்களால் கூடுதல் கோல் அடிக்க முடியவில்லை.