மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவின் அடியெல்ட் நகரின் ராய்ஸ்டன் பூங்காவில் உள்ள பெய்ன்ஹாம் சாலையில் கடந்த வாரம் போலீசார் ரோந்து வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளி கவுரவ் குந்தி (42), அவரது மனைவி அம்ரித் பால் கவுர் கத்தியபடி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த போலீசார், குந்தி குடிபோதையில் மனைவியை துன்புறுத்துவதாக தவறாக கருதினர். இதனால் அவரை கைது செய்ய முயன்ற போது அவர் எதிர்த்துள்ளார். ஆத்திரமடைந்த போலீசார், குந்தியை மூர்க்கத்தனமாக பிடித்து, கீழே தள்ளி, அவரது கழுத்தில் ஒரு போலீஸ்காரர் முழங்காலால் நெரித்துள்ளார். குந்தியின் மனைவி அம்ரித் பால் தனது கணவரை விடச் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை. இதனால் போலீசாரின் அடாவடி செயலை அவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். உடனடியாக போலீசார் குந்தியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
குந்தி மூளைச்சாவு அடைந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக ஆஸ்திரேலியாவில் உள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆஸி. போலீஸ் மிருகத்தனமாக தாக்குதல் இந்திய வம்சாவளி கவலைக்கிடம்: கழுத்தை முழங்காலால் நெரித்து அட்டூழியம்
0