சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். 2வது சுற்றில் சக வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் (40வது ரேங்க்) உடன் மோதிய பி.வி.சிந்து (17வது ரேங்க்) 21-14, 21-10 என நேர் செட்களில் எளிதாக வென்றார். இப்போட்டி 39 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
முன்னதாக, முதல் சுற்றிலும் இந்தியாவின் அஷ்மிதா சாலிஹாவை (47வது ரேங்க்) சிந்து வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் காலிறுதியில் அமெரிக்காவின் ஜாங் பெய்வென் (12வது ரேங்க்) உடன் சிந்து மோதுகிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்திய வீரர்கள் கிடாம்பி ஸ்ரீகாந்த், ராஜ்வத் பிரியான்சு, எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.