புதுடெல்லி: ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து 1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து வருவாய்துறை செயலாளர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் கூறும்போது, “சரக்கு மற்றும் சேவை வரி கட்டுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் வரி ஏய்ப்பு குறைவு உள்ளிட்டவை காரணமாக 2023 ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரி 11 சதவீதம் அதிகரித்து மொத்த வருவாய் 1,59,069 கோடியாக உள்ளது.
இதில் ஒன்றிய சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ.28,328 கோடி. மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூ.35,794 கோடி மற்றும் பொருட்கள் இறக்குமதி வரி மூலம் வசூலான ரூ.43,550 கோடி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.83,251 கோடி. இது கடந்த 2022 ஆகஸ்டில் 1,43,612 கோடியாக இருந்ததை விட 11 சதவீதம் அதிகம். இதேபோல் பொருட்களின் இறக்குமதி மூலம் வசூலிக்கப்படும் ரூ.1,016 கோடி உள்பட செஸ் வரி ரூ.11,695 கோடியாக உள்ளது”. இவ்வாறு தெரிவித்தார்.