திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் ஸ்வர்ணாந்திரா 2047 தொலை நோக்கு செயல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு மேற்கொண்ட பி4 திட்டத்தை மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் அமராவதி தலைமை செயலகத்தில் இருந்து காணொலியில் மதிப்பாய்வு செய்தார். அப்போது முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது: தங்கம் குடும்பம் திட்டம் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் 15 லட்சம் குடும்பங்கள் தத்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் திருப்பதி மாவட்டத்தில் தொடங்குகிறது. இந்த மாவட்டத்தில் 1911 குடும்பங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள மீதியுள்ள குடும்பங்கள் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் தத்தெடுக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தில் உள்ள குடும்பத்திற்கு கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்படும். இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் 15 லட்சம் குடும்பங்களை தத்தெடுக்க நடவடிக்கை: ஆந்திர முதல்வர் உத்தரவு
0