சேலம்: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் வாய்ப்பு இருந்தால் கலந்து கொள்வேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது; மதத்துக்கும் சாதிக்கும் அப்பாற்பட்ட கட்சிதான் அதிமுக. ராமர் கோயில் திறப்பு விழாவில் எந்த மதத்தினரும் எந்த சாதியினரும் கலந்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். கால் வலி இருப்பதால் சிரமம் இருக்கிறது, எனவே வாய்ப்பு இருந்தால் ராமர் கோயில் திறப்பு விழாவுக்குச் செல்வேன்.
மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும். மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதிமுக தலைமையில் நல்ல கூட்டணி அமையும்; கூட்டணி அமைந்ததும் முறைப்படி அறிவிக்கப்படும். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவர்கள் கலந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.