ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. அதன் பின் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வரானார். ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வரானார். பதவி விலகிய சம்பாய் சோரன் திடீரென டெல்லி சென்றார். அவர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜவில் சேருவார் என்றும் ஹேமந்த் சோரன் ஆட்சி கவிழும் என்றும் பாஜ தரப்பில் செய்திகள் பரப்பப்பட்டன. ஆனால், சம்பாய் சோரனுக்கு ஒரு எம்எல்ஏ ஆதரவு கூட இல்லை. அவரது ஆதரவாளர்கள் என்று கூறப்படும் ஜேஎம்எம் கட்சி எம்எல்ஏக்கள் 4 பேர் நேற்றுமுன்தினம் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்தித்தனர். இதனால், சம்பாய் சோரனை பாஜவில் சேர்க்க அக்கட்சி மேலிடம் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் புதிய கட்சி தொடங்க வாய்ப்பு உள்ளதாக சம்பாய் சோரன் கூறினார்.
ஜார்க்கண்ட் அரசை கவிழ்க்கும் முயற்சி தோல்வி ஒரு எம்எல்ஏ ஆதரவு கூட இல்லாததால் சம்பாய் சோரனை சேர்க்க பாஜ மறுப்பு: தனி கட்சி தொடங்குவதாக அறிவிப்பு
previous post