வாஷிங்டன்: இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பிரபல திரைப்பட இயக்குனருமான மீரா நாயரின் மகன் ஜோஹ்ரன் மம்தானி(33). உகாண்டாவில் பிறந்த ஜோஹ்ரன் மம்தானி தனது 7 வயதில் நியூயார்க்கிற்கு இடம் பெயர்ந்தார். ஜனநாயக கட்சி சார்பில் இந்தாண்டு நடக்க உள்ள நியூயார்க் மேயர் தேர்தலில் அவர் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் தீவிர வலது சாரியும் அதிபர் டிரம்புக்கு நெருக்கமானவரான லாரா லூமர் ஜோஹ்ரன் மம்தானியின் முஸ்லிம் மத நம்பிக்கை மற்றும் சோசலிச கருத்துகளை குறி வைத்து நியூயார்க்கில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து லாரா லூமர் எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில்,’ஹமாஸை ஆதரிக்கும் முஸ்லிம் சோசலிஸ்ட் ஒருவர் நியூயார்க் நகரத்தின் அடுத்த மேயராகப் போகிறார். எனவே இன்னொரு 9/11 தாக்குதலுக்கு நீங்கள் தயாராக இருங்கள்’ என குறிப்பிட்டுள்ளார். லாரா லூமரின் இந்த பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.