மேற்கு வங்கம், கொல்கத்தாவில் உள்ள அணு இயற்பியல் இன்ஸ்ட்டிடியூட்டில் காலியாக உள்ள இன்ஜினியர், டெக்னீசியன் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Engineer ‘C’: 2 இடங்கள். வயது: 25.8.2023 தேதியின்படி 30க்குள். தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்கில் பி.இ.,/பி.டெக்., 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி மற்றும் 2 வருட பணி அனுபவம்.
2. Technician ‘B’ (Electrical Wiring/ Servicing/Maintenance): 5 இடங்கள்.
3. Technician ‘B’ (AC Maintenance, AC Plant Operation and Maintenance): 1 இடம்.
4. Technician ‘B’ (Operation and Maintenance of Computer and Peripherals). 3 இடங்கள்.
5. Technician ‘B’ (Tracer/Draughtsman for drawing Office): 1 இடம்.
பணி எண் 2 லிருந்து 5 வரைக்கும் வயது மற்றும் கல்வித்தகுதி: வயது: 25க்குள். தகுதி: 60% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம்.
6. Lower Division Clerk: 5 இடங்கள். வயது: 25க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் எழுத மற்றும் பேச தெரிந்திருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு/ ஸ்கில் டெஸ்ட்/ டிரேட் டெஸ்ட் மூலம் தகுதியானவர்கள் தேர்்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பணி எண்: 1க்கு ₹500ம், பணி எண்: 2 முதல் 6 வரை ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினர்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.www.saha.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.8.2023.