சென்னை : அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. திட்டத்தின் கீழ் 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1,045 நீர்நிலைகள் நிரப்பப்பட்டு 24,468 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும்.