ஈரோடு: அத்திக்கடவு -அவிநாசி திட்டப்பணி குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் முத்துசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். பணி முடிந்து சோதனை ஓட்டம் நடந்த நிலையில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பவானி ஆற்றில் ஆண்டுக்கு ஒன்றரை டிஎம்சி உபரி நீரை நீரேற்று குழாய்கள் மூலம் 3 மாவட்டங்களில் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பப்பட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டத்தில் 1,045 குளம், குட்டைகளை நிரப்புவதே அவிநாசி-அத்திக்கடவு திட்டம் ஆகும்.