சென்னை : அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இழப்பீடு வழங்குவதற்கான பட்டியல் தயாரித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தால் மற்ற விவசாயிகளின் பாசன உரிமைகள் பாதிக்காது என்றார்.