சென்னை : அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தில் பாஜக அரசியல் செய்ய முயற்சித்ததாக ஈ.ஆர்.ஈஸ்வரன் குற்றம் சாட்டி உள்ளார். அத்திக்கடவு திட்டம் திறப்பு விழா நடைபெற உள்ளதை தெரிந்து கொண்ட அண்ணாமலை அரசியல் செய்ய முயற்சித்தார் என்றும் அத்திக்கடவு திட்டம் திறப்பு தேதி குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வந்த நிலையில் பாஜக விளம்பரம் தேட முயற்சிப்பதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.