சென்னை: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். 3 மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.1,916 கோடியில் அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார். வல்லம்-வடகால் கிராமத்தில் ரூ.706.50 கோடியில் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் 18,720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் ஃபாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு, அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.