வளசரவாக்கம்: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை, தனது வீட்டில் சில்லரை காசுகளை வைத்து விளையாடியதாக தெரிகிறது. அப்போது ஒரு காசை தொண்டையில் சிக்கியது. இதனால், மூச்சுவிட முடியாமல் குழந்தை திணறியுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தொண்டையில் சிக்கிய காசை எடுக்கப்பட்டு, குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.