சோழிங்கநல்லூர்: கொடுங்கையூர் முத்தமிழ்நகர் 5வது பிளாக் 113வது தெருவை சேர்ந்தவர் மலர்விழி (60). இவர், கடந்த ஜூன் மாதம் வழுக்கி விழுந்து காயமடைந்ததால், அதே பகுதி 3வது பிளாக்கில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 19ம் தேதி உடல்நிலை சரியாகி, மலர்விழி மீண்டும் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 54 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது.
புகாரின் பேரில், கொடுங்கையூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், வீட்டின் கதவு மற்றும் பீரோ பூட்டு உடைக்கப்படாமல் நகைகள் திருடுபோனது தெரிந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரித்து வருகின்றனர்.