சென்னை: நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றால் சங்க கட்டட பணிகள் பாதிக்கப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் விஷால் பதில் மனு தாக்கல் செய்தார். சங்க கட்டட பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பதவிக் காலம் மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. பதவி காலம் நீட்டிப்பில் எந்தவித விதி மீறலும் இல்லை எனவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெற்றால் சங்க கட்டட பணிகள் பாதிக்கப்படும்: நடிகர் விஷால்
0