சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தும். 8 கோடி மக்களோடு இணைந்து தேர்தலை சந்திப்போம். விவசாயி சின்னத்திலேயே நிற்போம். கூட்டணி இல்லையா என கேட்கிறார்கள். கூட்டணி இல்லாமல் வெல்ல முடியுமா எனவும் கேட்கிறார்கள். கொள்கை இல்லாமல் எப்படி வெல்வான் என யாரும் கேட்பதில்லை