திருச்சி: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில்தான் விசிக இருக்கும் என்று திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார். திமுக கூட்டணியில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற ஊசலாட்டத்தில் விசிக இல்லை. திமுக கூட்டணியில் தொடர்வது என்ற உறுதியான நிலைப்பாட்டில் விசிக உள்ளது. வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய தேவை எதுவும் எங்களுக்கு இல்லை என்று திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.
Advertisement


