Tuesday, July 23, 2024
Home » நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே புதுச்சேரியில் சட்டசபை தேர்தல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பே புதுச்சேரியில் சட்டசபை தேர்தல்: முன்னாள் முதல்வர் நாராயணசாமி தகவல்

by Ranjith

புதுச்சேரி: ‘புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் முன்பே சட்டமன்ற தேர்தல் நடக்கும்’, என புதுவை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசினார். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பில் புதுவை ராஜா தியேட்டர் அருகே காய்கறி மற்றும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஊதுபத்தி ஏற்றி நூதன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், ‘பாஜவின் 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை.

60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாடுகளில் இருந்து ரூ.15 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் ரூ.45 லட்சம் கோடி கடனாக வாங்கியிருக்கிறார். காங்கிரஸ் ஆட்சியின் போது வெறும் 19 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தனர்.

ஆனால் தற்போது 40 சதவீதத்துக்கு மேல் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. புதுவையில் என்ஆர்.காங்கிரஸ்- பாஜ கூட்டணி அரசில் மக்களுக்கான திட்டங்கள் எதுவும் சிறப்பாக செயல்படுத்தவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று கண்டிப்பாக ஆட்சியை பிடிக்கும். புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் முன்பே சட்டமன்ற தேர்தல் நடக்கும்’ என்றார்.

You may also like

Leave a Comment

twelve + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi