டெல்லி: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள மராட்டியம் உள்ளிட்ட 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சி ஆயத்தமாகி வருகிறது. சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக கார்கே, ராகுல் இருவரும் கட்சியின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி முதல் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பான காங்கிரஸ் கூட்டங்கள் நடைபெறும் என காங்.பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவித்துள்ளார். வரும் 24ம் தேதி ஜார்க்கண்ட் மாநில நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகிறார். 25ம் தேதி மராட்டிய மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கார்கே, ராகுல் ஆலோசனை நடத்துகின்றனர்.