அரக்கோணம்: சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக்கு தலைமை அதிமுகதான் என எடப்பாடி பழனிசாமி இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்.ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே எம்எல்ஏ சு.ரவியின் மகன் திருமணம் இன்று நடந்தது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:
தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்பட 6 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டது. 6 சட்ட கல்லூரிகள், 11 மருத்துவ கல்லூரிகள் கொண்டு வரப்பட்டது. மேலும் 1850 அம்மா மினி கிளினிக்குகள் ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் வேளாண்மை கல்லூரிகள், குடிமராமத்து பணிகள், தடுப்பணைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுகதான் தலைமை தாங்கும். இக்கூட்டணியில் பல கட்சிகள் இணைய உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.