சென்னை: கூட்டணி கட்சிகளை மதிப்பதில் திமுகவை எந்த குறையும் சொல்ல முடியாது என சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கடந்த 2021 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற கொள்கையின் படி குறைந்த தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அதே நடைமுறை எதிர்வரும் தேர்தலிலும் தொடரக்கூடாது. 2026 தேர்தலில் கூடுதல் இடங்களில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் கூடுதல் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்: சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்
0