டிஸ்பர்: அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அசாம், திரிபுரா, மிசோரம், மணிப்பூரை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலையில் பாதிப்பு லும்சனோங் ரதிசீரா பகுதியில் கரைபுரளும் வெள்ளத்தால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
அசாம் – மேகாலயா எல்லையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஏற்ப்பட்ட கனமழை மற்றும் காட்டாற்று வெள்ளம் காரணமாக அசாமின் எல்லை பகுதிகளான லும்சனோங் திசீரா பகுதியில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது அப்பகுதி முழுவதும் பொதுப்போக்குவரது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதே போல் தெற்கு அசாம்,மிசோரம் மற்றும் வடக்கு மணிப்பூரை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் அதனை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என அசாம் அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.