ஷில்லாங்: அசாம்-மேகாலயா எல்லையில் சர்ச்சைக்குரிய லாபங்காப்பில் உள்ள மலையானது மேகாலயாவின் மேற்கு ஜெயின்டியா மலைகள் மாவட்டம் மற்றும் அசாமின் கர்பி அங்லாங் மாவட்டத்தை சேர்ந்தவர்களாலும் உரிமை கோரப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேகாலயாவின் பல சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் ஆதரவுடன் சுமார் 400க்கும் மேற்பட்டோர் சர்ச்சைக்குரிய இடத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்று மரக்கன்றுகளை பிடுங்கி எறிந்தனர். மர உள்கட்டமைப்புக்களை அகற்றி தீ வைத்தனர். அங்கு பதற்றம் நிலவுகிறது.
அசாம் – மேகாலயா எல்லையில் பதற்றம்
0