கவுகாத்தி: அசாமில் நேற்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாக பதிவானது. பிரம்மபுத்ராவின் தெற்கு கரையில் உள்ள மோரிகான் மாவட்டத்தில் அதிகாலை 2.25மணிக்கு 16கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரங்கள் குறித்த தகவல் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை.
அசாமில் நிலநடுக்கம்
0