கவுகாத்தி: அசாமில் 24 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக உல்பா தீவிரவாதிகள் பல்வேறு ஊடகங்களுக்கு இமெயிலில் தகவல் அனுப்பினர். தொழில்நுட்ப பிரச்னையால் குண்டு எதுவும் வெடிக்கவில்லை என்று உல்பா வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த தகவலையடுத்து அந்த இடங்களுக்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அடங்கியு குழு அனுப்பி வைக்கப்பப்பட்டது.மாநிலத்தின் அனைத்து மாவட்ட எஸ்பிக்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மாநில போலீசின் மூத்த அதிகாரி கூறுகையில்,‘‘இ மெயிலில் குறிப்பிடப்பட்ட 19 இடங்களுக்கு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அனுப்பி உள்ளோம். மேலும் 5 இடங்கள் எதுவெனெ்று தெரியவில்லை. இதுவரை வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை’’ என்றார். ஆனால், லக்கிம்பூர் உள்பட 3 இடங்களில் வெடிகுண்டு போன்ற பொருள் இருந்தது தெரியவந்துள்ளது என போலீசார் தெரிவித்தனர். உல்பா தீவிரவாதிகளின் மிரட்டலால் மக்களிடையே பீதி நிலவியது.