ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தில் ஸ்டெனோகிராபர், அசிஸ்டென்ட், டிரைவர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
1. Junior Stenographer: 3 இடங்கள். வயது: 28க்குள். சம்பளம்: ரூ.20,800-81,100. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
2. Junior Secretariat Assistant:
i) General: 10 இடங்கள்.
ii) Finance & Accounts: 3 இடங்கள்.
iii) Stores & Purchase: 3 இடங்கள்.
வயது: 28க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
3. Driver (Non Technical): 1 இடம். வயது: 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகு ரக வாகனத்துக்குரிய ஓட்டுனர் உரிமம் மற்றும் 3 வருட பணி அனுபவமும், மோட்டார் மெக்கானிசம் பிரிவில் அறிவுத் திறன் பெற்றவராகவும் இருத்தல் வேண்டும்.
கட்டணம்: ரூ.500/-. எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்/மாற்றுத்திறனாளிகள்/பெண்களுக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். https://cbri.res.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.03.2025.