பெய்ஜிங் : ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கிச் சுடுதலில் மேலும் 2 தங்கம் வென்று ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. சீனாவின் ஹாங்சு நகரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய வீரர். வீராங்கனைகள் மிகவும் எதிர்பார்த்த போட்டிகளில் பதக்கங்களை கைவிடாமல் அறுவடை செய்து வருகின்றன. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் குழு, மகளிர் கிரிக்கெட், குதிரையேற்றம் ஆகிய போட்டிகளில் இந்தியா தங்கத்தை கைப்பற்றி உள்ளது.
அந்த வரிசையில், இன்று காலை நடைபெற்ற மகளிருக்கான 25 மீட்டர் பிஸ்டல் ரேபிட் குழு பிரிவு மற்றும் 50 மீட்டர் த்ரீ போஷிசனில் துப்பாக்கிச் சுடுதலிலும் தங்கம் வென்றுள்ளது. 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதலில் 1,764 புள்ளிகள் பெற்று இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றுள்ளது. 3 நிலை போட்டியில் சிஃப்ட் சாம்ரா (594), ஆஷி சௌக்சே(590), மனினி கௌசிக் (580) புள்ளிகள் பெற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய பெண்கள் அணி வீரர்கள் மனு பாக்கர், ஈஷா சிங், ரிதிம் சங்வான் ஆகியோர் 1,759 புள்ளிகளுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தி உள்ளனர். 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சம்ரா தங்கம் வென்றார்.இந்தியாவின் சம்ரா சிப்ட் கவுர் தங்கம் வென்ற நிலையில் ஆஷி சவுக்சே வெண்கலப்பதக்கம் வென்றார்.இதுவரையிலான ஆசிய விளையாட்டு போட்டிகளில் 5 தங்கம், 5 வெள்ளி உட்பட 19 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளது.