டெல்லி: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு ராஜ்நாத் சிங் பரிசு வழங்கினார். தங்கப்பதக்கம் வென்றோருக்கு ரூ.25 லட்சம், வெள்ளிப் பதக்கம் வென்றோருக்கு ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்படும். வெண்கலப் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் எனவும் அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.