கொழும்பு: ஆசிய கோப்பை இந்தியா – பாக். சூப்பர் 4 போட்டி ரிசர்வ் டேவில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில், இரண்டு பிரிவுகளில் முதல் 2 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி, கொழும்பு நகரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ரோஹித் சர்மா –சுப்மன் கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
24 புள்ளி 1 ஓவர்கள் விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை காரணமாக நேற்றைய போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டு ரிசர்வ் டேவிற்கு மாற்றம் செய்யப்பட்டது. தற்போது விராட் கோலி 8 ரன்னுடனும், கே.எல்.ராகுல் 17 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த நிலையில், ஆசிய கோப்பை இந்தியா – பாக். சூப்பர் 4 போட்டி ரிசர்வ் டேவில் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மைதானத்தில் நிலவும் ஈரப்பதம் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கொழும்பில் விட்டு விட்டு மழை பெய்து வரும் சூழலில், போட்டி கைவிடப்பட்டால் இரு அணிகளும் தலா 1 புள்ளி பெறும்.