சென்னை : ஆசியக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். வங்க தேசத்திற்கு எதிரான போட்டியில் அக்சர் பட்டேல் காயமடைந்ததால் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டார்.
இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னதாக, அக்சர் பட்டேலுக்குப் பதிலாக ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன்மூலம், அக்சர் படேலுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர் இறுதிப் போட்டியில் விளையாடலாம் என்று நம்பப்படுகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் இந்தியா 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த ஆட்டத்தில், அக்சர் படேலுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு பதிலாக பதிலாக வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று கொழும்புவில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் எடுத்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி போராடி இலக்கை எட்ட முடியாமல் தோல்வியடைந்தது.
இறுதியில் வெற்றிக்காக கடுமையாக போராடிய அக்சர் பட்டேலின் கையில் காயம் ஏற்பட்டது. அடுத்த மாதம் ஐசிசி உலகக்கோப்பை தொடர் தொடங்க உள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக ஆசிய கோப்பை இறுதி போட்டியில் அக்சர் பட்டேலுக்கு ஒய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு பதிலாக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.